tamilnadu

img

விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் நெல்லை சு. முத்து காலமானார்!

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு. முத்து(74) உடல் நலக்குறைவால் காலமானார்.
நெல்லை சு. முத்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.
மேலும் இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு என 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார், 4 புத்தகங்களுக்கு தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார்.