tamilnadu

img

அன்புமணியை தகுதி நீக்கம் செய்க: முத்தரசன்

புதுச்சேரி, ஏப். 13-மதச் சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் புதுச்சேரி காங்கிரஸ் வேட் பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்திலும், இடைத் தேர்த லில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு கேட்டு, லாஸ்பேட் உழவர் சந்தையில் திறந்த ஜீப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் பிரச்சாரம் செய்தார்.முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் நிர்வாகி ராமலிங்கம், சிபிஎம் பிரதேசக் குழு உறுப்பினர் ஆனந்து, சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.அந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், “பாட்டாளி மக்கள் கட்சி ஒரு விலை போன கட்சி. இந்ததேர்தலில் தங்களுக்கு என்ன கிடைக்கவேண்டும் என நினைத்தார்களோ அது கிடைத்து விட்டது” என்றார்.இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாமக உள்ளிட்ட அந்த கூட்டணி தோற்பது உறுதி என்பதால்தான் வாக்கு சாவடிகளை கைப்பற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு கூறியுள்ளார். எனவே. அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தினார்.