முதுமையில் மறதியை குறைக்க உதவும் செல்லப் பிராணிகள்
வயதானவர்களின் மூளையில் செல்லப் பிராணிகள் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. முதுமை, தனிமை, தனிமைப்படுத்தப்பட்ட நிலை, மன நலம் ஆகியவற்றிற்கு இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. முதியோரின் மூளையில் ஏற்படும் தனிமையை போக்க செல்லப்பிராணிகள் உதவுகின்றன. மற்றவர்களுடன் வாழும் முதியவர்களின் மன நலம் பேண இவை உதவுவதில்லை.
மன நலம் காக்க உதவும் பூனையும் நாயும்
அமெரிக்காவில் தனிமையில் வாழும் பல முதி யவர்கள் பூனை அல்லது நாயை தங்களுடன் செல்லப் பிராணியாக வளர்க்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. சராசரியாக 66 வயதிற்கும் மேற்பட்ட 7,900 பேர்களிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஒரு செல்லப் பிராணி இருக்கும் போது தங்கள் மன நலம் பேணப்படுகிறது என்று இவர்கள் நம்புகின்றனர். என்றாலும் ஒரு செல்லப்பிராணியை சொந்த மாக பெற்றிருப்பவர் மற்றவர்களுடன் வாழும் போது அவர்களின் அறிவாற்றல் திறனில் இந்த பிராணியால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படுவ தில்லை. தனிமை அல்லது அது சரிவர கிடைக்கா மல் போவதே இங்கு பிரச்சனை. அறிவாற்றல் திறனில் ஏற்படும் குறைபாடு, டிமென்சியா ஏற்படு வதற்கான வாய்ப்பு போன்றவை ஒரு செல்லப் பிராணியால் குறைகிறது என்று சீனாவின் குவான் சூ (Guangzhou) சன்யாட்-சென் (Sun Yat-sen) பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. இதுபற்றிய ஆய்வுக் கட்டுரை கண்டென்ட்-கண்டெண்ட் (journal contentcontent) என்ற இதழில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. 2021 தரவு களின்படி அமெரிக்காவில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 28% ஒரு நபர் மட்டுமே வாழக்கூடிய வீடுகளில் வாழ்கின்றனர். இந்நிலை பல உலக நாடுகளிலும் காணப்படுகிறது. டிமென்சியா போன்ற பல மன நலக்குறைபாடு களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று எண்ணற்ற ஆய்வுகள் பல காலமாக கூறி வருகின்றன. தோழமையுள்ள நான்கு கால் விலங்கு களால் இந்த ஆபத்து குறையும் என்று கருதப்படு கிறது. யுகேயில் ஐம்பது அல்லது அதற்கும் அதி கமான வயதுடைய ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் மக்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு புதிய ஆய்வு இதை நிரூபித்துள்ளது. 2010 முதல் 2019 வரை யுள்ள காலத்தில் இவர்களின் வாழ்க்கைமுறை மாற்றம், அறிவுக் கூர்மை போன்றவை ஆராயப் பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 56% பெண்கள். பங்கேற்பாளர்களின் பேசும் திறன், நினை வாற்றலை (verbal memory) விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். பேசுவதில் நினைவாற்றல் என்பது அவர்களிடம் சொல்லப்பட்ட ஒரு கதையை அவர்கள் திரும்பச் சொல்வது, பேச்சில் வெளிப் படும் அறிவாற்றல், தங்கு தடையின்றி பேசுதல் போன்ற பண்புகளைக் குறிக்கிறது. ஒருவருக்கு மொழிவளம் இருப்பது இதற்கு அவசியம்.
வாழ்வில் ஒளியேற்ற வரும் செல்லப்பிராணி
செல்லப் பிராணிகளுடன் வாழ்பவர்களுக்கு மொழியுடனும் அறிவாற்றலுடன் தொடர்பு டைய நினைவாற்றலில் ஏற்படும் குறைவு தாம தமாகவே நிகழ்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறு கின்றன. தனிமையில் முதுமையை அடை யும்போது துணையில்லாமல் வாழ்பவர்களின் மூளை செல்லப்பிராணியால் சுறுசுறுப்படைகிறது. இதுபற்றிய ஆய்வுகள் மேலும் ஆழமாக நடத்தப்படவேண்டும் என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர். செல்லப் பிராணிகளை சொந்தமாக பெற்றி ருப்பவர்களின் வாழ்க்கையில் பிராணிகளால் எளியதொரு மாற்றம் நிகழ்கிறது. இது அவர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்துகிறது. இந்த மாற்றம் பொது ஆரோக்கியத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இசை கேட்டல், பாட்டு பாடுதல், தனியாக அல்லது குழு வாக நடனமாடுதல் போன்ற செயல்பாடுகள் வய தானவர்களின் நலத்தில் முக்கியப்பங்கு வகிக்கி றது என்று பல சமீப ஆய்வுகள் சுட்டிக் காட்டு கின்றன. இந்நிலையில் செல்லப்பிராணிகளும் முதியோரின் வாழ்வைஒளிமயமாக்க உதவு கின்றன என்பதை இந்த ஆய்வு வலியுறுத்து கிறது.