tamilnadu

img

ஸ்மார்ட் முகமூடி - சிதம்பரம் ரவிச்சந்திரன்

ஸ்மார்ட் முகமூடி - சிதம்பரம் ரவிச்சந்திரன்

விலை குறைவான ஸ்மார்ட் முகமூடி. அணிந்திருப்பவரின் மூச்சுக்காற்றை பகுப்பாய்வு செய்து நுரையீரல், சிறுநீரக நோய்களை கண்டறிய உதவுகிறது. இதன் மூலம் நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப சிகிச்சை செய்யமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கருவி மூச்சுக்காற்றின் மூலம் பெறும் விவரங்களை இதனுடன் பொருத்தப்  பட்டுள்ள ஊடலை (Bluetooth) செயலிக்கு அனுப்புகிறது. இது உடனடியாக சுவாசம்,  வளர்சிதை மாற்றங்கள் தொடர்பான செயல்முறை கோளாறுகளை பகுப்பாய்வு  செய்கிறது. இதனால் நுரையீரல் நோய் களை முன்கூட்டியே கண்டறிந்து துல்லிய மாக மருத்துவம் செய்யலாம். “இத்தொழில் நுட்பம் ஒரு பொது ஆரோக்கிய தளமாக வும் பயன்படுத்தலாம். இதில் குறிப்பிட்ட ஒரு நோய்க்கு ஒரு  உணரியை அல்லது பல உணரிகளை இணைத்து பல்வேறு நோய்களை கண்டறி யலாம். இந்த கருவி சிறுநீரகத்தின் ஆரோக்கியமான நிலை, ஆஸ்துமா மற்றும்  நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் (COPD) [chronic obstructive pulmonary disease] நிலையை எடுத்துக்கூறுகிறது. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் (Science) இதழில் வெளிவந்துள்ளது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் முறையில் நோயாளி வெளிவிடும் மூச்சுக்  காற்றை குளிரவைக்கவேண்டும். ஐஸ்கட்டி கள் நிறைந்த பக்கெட்டுகள் அல்லது குளி ரூட்டும் சாதனங்கள் தேவைப்படுகிறது. இந்த பகுப்பாய்வுகள் ஆய்வகத்திலேயே நடைபெறுகின்றன” என்று ஆய்வுக்கட்டுரை யின் மூத்த ஆசிரியரும் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழக விஞ்ஞானியுமான பேராசிரியர் வெய் கவோ (Prof Wei Gao)  கூறுகிறார். இந்த முகமூடியில் பல அடுக்குகள் உடைய இபிகேர் (EBCare) என்ற கருவி உள்ளது. இது நோயாளி வெளிவிடும் மூச்சுக்காற்றில் இருந்து நோய்க்கான அறி குறிகளை அடையாளம் காண பயன்படும்  காட்டிகளை (Biomarkers) கண்காணிக்கி றது. மூச்சுக்காற்றை குளிரவைக்கிறது. சுலபமாக வெப்பத்தை இழக்கும் பொரு ளால் உருவாக்கப்பட்டுள்ள இதில் ஒரு  ஹைடிரோஜெல்லும் உள்ளது. இயற்கை யாக நீரை ஆவியாக்குதல் மூலம் இது குளிர்விக்கப்படுகிறது. குளிர்விக்கப்பட்ட இந்த ஆவி நேரடியாக கருவிக்குள் அமைக்  கப்பட்டுள்ள உணரிக்கு அனுப்பப்படுகிறது.

மூச்சுக்காற்றில் இருந்து  நோய் விவரங்கள்

இது ஆல்கஹால் அளவு, பி ஹெச் என்னும் ஹைடிரஜன் செறிவின் அளவு (pH), அம்மோனியம் மற்றும் நைட்ரேட் போன்ற மூச்சுக்காற்றில் இருக்கும் பல  பொருட்களின் இருப்பு, நிலை மற்றும் அளவுகளை கண்டுபிடிக்கிறது. பிறகு  இந்த குளிர்விக்கப்பட்ட மூச்சுக்காற்று  தொடர்ச்சியாக நீர் இருக்கும்படி உரு வாக்கப்பட்டுள்ள ஹைடிரோஜெல்லுக்கு அனுப்பப்படுகிறது. இந்த முகமூடி ஆரோக்கியமான தன்னார்வலர்கள், ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுள்ளவர்களிடம் பரிசோதிக்கப்பட்டது. இந்த ஆய்வுகளில் இருந்து இது ஆல்கஹால் அளவு, அதன்  செரிமானநிலை, புரதங்களை எடுத்துக் கொள்வதால் மூச்சுக்காற்றில் உருவாகும் அம்மோனியம் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய உதவுகிறது. சிறுநீரக நோய்கள், புரத வளர்சிதை மாற்றத்தை முன்கூட்டியே கண்டறிய இது பயன்படுகிறது. சுவாசக்குழாய் வீக்கம் உள்ள ஆஸ்துமா போன்ற நோயுள்ளவர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றில் நைட்ரேட்டின்  அடர்த்தி அதிகமாக இருப்பது கண்டறி யப்பட்டது. இந்த முகமூடியை ஒருவர் பக லிலும் இரவிலும் அன்றாடச் செயல்பாடு களின்போது அணிந்துகொள்ளலாம். மருத்துவமனைக்கு செல்லாமல் தொடர்ச்சியாக, வீட்டில் இருந்துகொண்டே நிகழ்நேரத்தில் ஒருவர் தன் ஆரோக்கி யத்தை தனிப்பட்டமுறையில் கண்காணித்து அறியலாம். இந்த கருவி பெருமளவில் உற்பத்தி செய்யப்படும்போது மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது நடை முறையில் இருக்கும் கருவிகளில் உள்ள  மறுபயன்பாட்டுக்குரிய மின்னணு உதிரி பாகங்கள் பல டாலர்கள் விலையில் மட்டுமே  கிடைக்கக்கூடியவை. ஆனால் இந்த கருவியின் உதிரி பாகங்களின் விலை ஒரு டாலர் மட்டுமே.  “இக்கருவி அறிவியலும் பொறியியலும் இணைந்த ஒரு அற்புத கண்டுபிடிப்பு. பல்வேறு நிலைகளில் இது செயல்படும் விதம் பற்றி மேலும் ஆழமாக ஆராயப்பட வேண்டும். இந்த கருவி ஒரு புது மருந்தை  பற்றி ஆராய, அதன் செயல் திறனை மதிப்பிட உதவும். ஆரம்ப நிலையில் எடுத்துக்கொள்ளப் படும் மருந்துகள் சரிவர வேலை செய்கின்ற னவா என்பதை அறிய உதவும்வகையில் மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். இதற்கு நீண்ட காலம் ஆகலாம்” என்று  நாட்டிங்ஹாம் (Nottingham) பல்கலைக் கழக விஞ்ஞானி பேராசிரியர் இயன்ஹால் (Prof Ian Hall) கூறுகிறார். வருங்காலத்தில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை துறை யில் இந்த ஸ்மார்ட் முகமூடி பெரும் புரட்சி யை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்பு கின்றனர்.