அலையாத்திக் காடுகளின் அழகு - ஐ.வி.நாகராஜன்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியிலுள்ள அலையாத்திக்காடு புயல், சூறாவளிக் காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோரக் கிராமங்களையும், கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக எப்போதும் விளங்குகின்றன. அதோடு மட்டுமில்லாமல் கட லோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்துநிறுத்துகிறது. முத்துப்பேட்டை பகுதியில் 11,885.91 எக்டேர் பரப்பளவில் காணக்கூடிய இக் காடுகள் திருவாரூர் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவிரி ஆற்றுப் படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத் திக்காடுகள் உள்ளன. தஞ்சை மாவட்டத் தில் அதிராம்பட்டினம் மேற்குப் பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடி யக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலை யாத்திக்காடுகள் நீண்டுள்ளன. முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந் தூரப்பயணம் செல்வது பயணிப்ப வர்களின் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திக் காடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகள் அழகால் பிர மிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப் பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்று விட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறத் தவறுவதில்லை. அந்த அளவிற்கு ஒட்டு மொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொர்க்கத்தை இங்கு காணமுடியும். அத னால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்று மின்றி இந்தியாவில் பல்வேறு பகுதி யிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தா மல் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அலையாத்திக் காட்டில் லட்சக்கணக்கான பலவிதமான அரியவகை பறவை இனங்களும் உள்ள தால் இங்கு வரும் சுற்றுலா பயணி கள் இதனை கண்டு அடையும் ஆனந் தத்துக்கு அளவில்லை. இதனை ரசிக்க இரண்டு கண்கள் போதாது என்று வந்து போகும் சுற்றுலா பயணிகள் வர்ணிக்கின்ற னர். இப்போது இப்பகுதியில் கடும் வெயில் காணப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடி யாத நிலையில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வெயிலை பொருட்படுத்தாமல் இந்த அலையாத்திக்காட்டுக்கு வந்து செல்வது அந்த பகுதியில் பெரும் பர பரப்பாகவே இருக்கிறது. திருச்சி, நாகப்பட்டினம், பட்டுக் கோட்டை, திருத்துறைப்பூண்டி, திரு வாரூர் உட்பட அருகில் உள்ள மாவட் த்திலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணி கள் வந்து குவிகின்றனர். இதில் புதியதாக திருமணமான ஜோடிகள் அதிகளவில் இங்கு வந்து உற்சாகத்துடன் படகில் பயணம் செய்கின்றனர். அதற்காக அலையாத்திக் காட்டிற்கு அழைத்துச் செல்லும் வனத்துறையின் படகுகள் கிடக்கும் ஜாம்புவானோடை படகுத் துறையில் ஏராளமான சுற்றுலா பயணி கள் குவிவது கண்கொள்ளாக் காட்சி யாக உள்ளது. இதனால் படகுகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி உள்ளே அழைத்துச் செல்வதும் திரும்ப வருவது மாக அந்தப்பகுதி களை கட்டிக் காணப்படுகிறது.
தேச பக்தன் - வல்லம் தாஜுபால்
இமயம் குமரி எல்லைக ளாக அமைந்தது மட்டுமா நாடு? அல்ல! மக்களே நாடு! அவர்நலனே நாட்டுநலன்! சிக்கலே இல்லாத சிந்தனை இதுதான்! தற்கொலை உழவன் புரிந்தால், தீப கற்பமே சாவதாய்க் கருதுவோன் தேசபக்தன்! வல்லுற வால்பெண் வதைபட்டால், இந்தியத்தாய் கொல்லப் படுவதாய்க் கூறுவோன் தேசபக்தன்! சாதிச் சண்டையிட்டால், இந்திய ஆன்மா பாதிக்கப் பட்டதாய்ப் பதறுவோன் தேசபக்தன்! எரியும் மதவெறியால், அசோக சக்கரம் கரியாகும் என்று கலங்குவோன் தேசபக்தன்! ஒருநாடு ஒருமொழி குறிக்கோளால் நாட்டின் ஒருமைப் பாட்டுக்கு ஊறுஎன்போன் தேசபக்தன்! பன்முகத் தன்மை பாழானால், தாய்நாட்டின் நன்மதிப்பு வீழுமென நவில்பவன் தேசபக்தன்! தீயதைக் கண்டிப்போர் தேச விரோதியெனில் வாயாரச் சொல்க அது வசையல்ல பாராட்டே!