districts

img

வடகாட்டில் சாதி ஆதிக்கவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களை சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் சந்தித்தார்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் சாதி வெறியர்களால் பாதிக்கப்பட்ட மக்களை சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களோடு துணை நிற்பதாகவும் உறுதியளித்தார்.
பிறகு புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து, வடகாடு கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உரிமை தொடர்பான வழக்கை விரைந்து நடத்தி தீர்வு காணவும், சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றிலும் எரிந்து போன வீட்டுக்குப் பதிலாக அரசே புதிய வீட்டை கட்டித்தரவும், சேதமடைந்த வீடுகள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் உடைமைகளுகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடுகள் வழங்க வலியுறுத்தியும் சிபிஎம் மாநில செயலாளர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது