tamilnadu

img

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு-4 தொகுதி இடைத்தேர்தல்

சென்னை, ஏப்.13-தமிழகத்தில் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகள் மட்டும், மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகள் காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பின்னர், கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் காலமானதால், அந்த தொகுதியும் காலியானது.அதன்பின்னர், தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சமீபத்தில் காலியான சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. எனவே, இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளி லும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி. சண்முகையா, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் மருத்துவர் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு


சென்னை, ஏப். 13-நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுஆதரவு அளிக்கும் என கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழகத்தில் காலியாகஇருந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் மே மாதம் 19ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல்ஆணையம் நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு அறிவித்துள் ளது. நாடாளுமன்றத் தேர்த லோடு 18 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல் அறி விக்கப்பட்ட பொழுதே மேற்கண்ட நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை இணைத்து நடத்த வேண்டுமென மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வற்புறுத்தின. ஆனால் ஆளுங் கட்சியின் நிர்ப்பந்தம் காரண மாக தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதி மன்றத்திலும் உடனடியாக தேர்தல்நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் வாக்குமூலம் தாக்கல்செய்தது. இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் திமுகவின் கோரிக்கையை ஏற்று விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது. இந்தப் பின்னணியில் தற்போது நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.500 கோடி வீண் செலவு


சட்டப்படி நடத்த வேண்டியதேர்தலை நடத்துவதற்குஉச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடித் தான் தேர்தல் நடத்த வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது நடை பெறவுள்ள ஏப்ரல் 18ந் தேதியே நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தியிருந் தால், தற்போது தனியாக தேர்தல் நடத்துவதால் ஏற்படும் சுமார் ரூ. 500 கோடி தேர்தல் செலவை தமிழக அரசு மிச்சப்படுத்தியிருக்க முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.மேலும் தற்போது அறி விக்கப்பட்டுள்ள தேர்தலையும் சேர்த்து 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று, மே 23ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்து, திமுக வேட்பாளர்கள் அபரிமிதமான வெற்றி பெறு வார்கள். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் புதிய ஆட்சி ஏற்படுவதும் இதன்மூலம் உறுதி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்நிலையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதிகளுக்கும் நடை பெறவுள்ள இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.