செங்கல்பட்டு நகராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. சிறு குறு தொழில்துறை அமைச்சர் தமோ. அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினர்.