கரூர்:
தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் அரவக் குறிச்சி சட்டமன்ற வேட்பாள ராக போட்டியிடும் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோதிகுமாருக்கு திங்களன்று பிரச்சாரம் செய்யஅனுமதி வழங்கப்பட்டிருந்தது. தலைவாபாளையம், ஐயம்பாளையம், தோட்டக் குறிச்சி நானபரப்பு, செங்கல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று மாலை 4 முதல் இரவு 8 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டு ஒருவாரத்திற்கு முன்னதாகவே அனுமதி வழங்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், திடீரென அனுமதி மறுத்து அதற்கான (மறுப்பு) ஆணை மதியம் 12 அளவில் வழங்கப்பட்டுள் ளது. மேலும் இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் இரவு 8 மணிக்கு சந்திக்க அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.காவல்துறையும் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு பிரச்சார அனுமதி வழங்குவதில் அதிகார துஷ்பிர யோகம் நடக்கிறது. நேர்மையான தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் நீதி மன்றத்தை அணுகுவோம்.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அரவக்குறிச்சியில் நான்காவது முறை தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் அரவக்குறிச்சி வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜோதிகுமார் தெரிவித்துள்ளார்.முன்னதாக ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்ச ரின் அரவக்குறிச்சி பிரச்சார பயணத்தை ஒட்டி
திமுக பிரச்சார பயணத்துக்கு அனுமதி மறுத்த காவல் துறை குறித்து செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் திமுகவேட்பாளர் செந்தில்பாலாஜி. இதேபோல மக்கள் நீதி மையத்தின் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளருக்கு கடந்த 2 நாட்களாக பிரச்சாரம் அனுமதி வழங்காமல் காலதாமதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.