தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா, வெள்ளியன்று தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார். திமுக தொகுதி பொறுப்பாளர் கே.என்.நேரு, மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், மதிமுக மாவட்டச் செயலாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.