tamilnadu

img

நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குக: ஓய்வூதியர் சங்கம்

கடலூர், ஜூலை 13- கடலூர் மாவட்டத்தில் நீர் சேமிப்பு கட்ட மைப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் 14ஆவது கடலூர், விழுப்புரம் மாவட்ட பேரவைக் கூட்டம் கடலூ ரில் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமை யில் நடைபெற்றது. இணைச் செயலாளர் ஜி.ஜெயச்சந்திரன் வரவேற்றார். மாநில  பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஜோதிவீர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி ஆகியோர் பேசினர். செயலாளர் சி.தேவராஜ் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஆர்.பாலகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்.  ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.புருசோத்தமன், மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.  துணை தலை வர் ஆர்.தனபால் நன்றி கூறினார். நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும், பூமிக்கு அடியிலும்  நீர் சேமிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.