மெட்ரோ, ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி சிபிஎம் பிரச்சார இயக்கம்
கிருஷ்ணகிரி, ஜன.16- ஓசூர் - பெங்களூரு மெட்ரோ மற்றும் கூடு தல் பயணிகள் ரயில் திட்டங்களை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் ஓசூரில் வெள்ளி யன்று தொடங்கியது. மாநகரச் செயலாளர் எம்.ஜி.நாகேஷ் பாபு தலை மையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், ஒருங்கிணைப்பாளர் ஜி.ஸ்ரீதரன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் லெனின் முரு கன், மாவட்டக் குழு உறுப்பி னர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சார இயக்கத்தின் இலச்சி னையை மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி வெளியிட, மாவட்டச் செய லாளர் சி.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜனவரி 20-ஆம் தேதி அத்திப்பள்ளியில் இருந்து 100 பேர் பங்கேற்கும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. அன்று மாலை ஓசூரில் நடை பெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார். இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய ஆர்.பத்ரி, ஓசூர் பகுதி தொழில் ரீதியாக வேகமாக வளர்ந்து வருவதால் மெட்ரோ ரயில் சேவை மிகவும் அவசியம் என்றார். தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி இத்திட்டத்தைத் தள்ளிப் போடக் கூடாது எனவும், இக்கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழி யாக மத்திய அரசின் கவ னத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்றப் போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார். பிரச்சார இயக்கத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பிரகாஷ், ஓசூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.தேவராஜ், மாநகரக் குழு உறுப்பினர்கள் பி.ஜி. மூர்த்தி, ரவி, ரயில் பயணி கள் சங்க முருகேசன், ஓய்வு பெற்றோர் சங்கத் தலை வர்கள் துரை, சீனிவாசலு, திராவிட கழக மாவட்டத் தலைவர் வனவேந்தன், எல்ஐசி முகவர் சங்கத் தலை வர் முருகன் நாயனார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், பொருளாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் ஓசூர் - கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டத்தை உடனடி யாகத் தொடங்க வேண்டும், பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும், ஓசூர் - பெங்களூரு இடையே கூடுதல் பயணிகள் ரயில் களை இயக்கவேண்டும், மூத்த குடிமக்களுக்கான 50% பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது.
