சென்னை:
சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் சின்னதுரை, “புதுக்கோட்டை மாவட்டம் சிற்பக்கலையில் சிறந்து விளங்கக்கூடிய மாவட் டம். குன்னாண்டார் கோவில் நார்த்தாமலை விராலிமலை திருமயம் ஆகிய பகுதிகளில் மலைக் கோட்டையில் சிற்பங்கள் அதிகமாக இருக்கின்றன.
மேலும், சிற்பக்கலையில் உலகத்தரம் வாய்ந்த புதுக் கோட்டை இசை, நாடகம், ஓவியத்தில் சிறந்து விளங்கக் கூடியஒரு மாவட்டம். ஆகவே அங்கு ஒரு நுண்ணியல் கலைக் கல்லூரிஅமைத்திட அமைச்சர் முன் வருவாரா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம்தென்னரசு, புதுக் கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை குன்னாண்டார் கோவில் பகுதியில் இருக்கக்கூடிய மலைப் பாறைகள் சிற்பம் செய்வதற்கான பாறைகள் அல்ல. அவை கோவில் கட்டுமானத்திற்கு அடித்தளம் அமைக்க பாறைகளாக இருக்கலாம் அல்லது கற்பலகைகள், நடைமேடைகள் போன்றவற்றை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.உறுப்பினர் சின்னதுரை கூறுவது போல் மண் மலை, பொன் மலை, பொம்மை மலை என்பது உள்ளிட்ட ஒன்பது வகையான மலர்கள் அந்த பகுதியில் இருக் கின்றன என்பதை நானும் அறிவேன்.அதில் மேலே இருக்கிற மலையில் தீ மூட்டி அதனால் வெப் பத்தை உருவாக்கி அதன் வழியாக அந்தக் கற்களை எல்லாம் உடைத்து அந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கற்களை வைத்து சிற்பங்கள் செய்யக்கூடிய அளவிற்கு வாய்ப்பில்லை. கட்டடம் மற்றும் அடித்தளம் போன்றவற் றுக்கு தான் அந்த கற்களை நாம் பயன்படுத்த முடியும். எனவே இப்போது இருக்கக்கூடிய சில வழிகள் அந்த கற்களை வைத்து அங்கே ஒரு சிற்ப கலைக்கூடம் உருவாக்குவதற்கான அடிப்படையான வாய்ப்பு இல்லை.அரசு சார்பில் மகாபலிபுரத் தில் சிற்பம் மற்றும் கட்டடவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதன் மூலம் மகாபலிபுரத்தில் சிற்ப கலைக்கூடம் ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது” என்றார்.