tamilnadu

img

ஆற்றில் மூழ்கி பலியான மாணவன்  குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குக: சின்னதுரை கோரிக்கை....

சென்னை:
ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பலியான பத்தாம் வகுப்பு மாணவனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சரிடம் சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரை கோரிக்கை விடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந் தர்வக்கோட்டை தொகுதிக்குட்பட்ட, குளத்தூர் வட்டம், செட்டிப்பட்டி ஊராட்சி, காயம் பட்டி கிராமம் தலித் கிறித்துவ வகுப் பைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மூத்த மகன் ஹரிஸோ  10ஆம் வகுப்பு படித்து வந்தான். செப். 12 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாலை 4 மணிக்கு கட்டளை வாய்க்காலில் நான்கு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது, ஹரிஸோ மட்டும் நீரில் மூழ்கி, தண்ணீர் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளார்.அந்த மாணவனின் உடல் நள்ளிரவில் வெண்ணெய் முத்துப்பட்டி பாலத்தில் கண்டறியப்பட்டு மீட்டுள்ளனர். இவரது மறைவால் தலித் கிறித்துவ வகுப்பைச் சேர்ந்த பாஸ்கரின் குடும்பமும், கிராம மக்களும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.ஆகவே, தனது மகனை இழந்து தவிக்கும் பாஸ்கரின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் “முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து” நிதியுதவி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கடிதம் அளித்தார்.