சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி 2, 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இறுதியாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டன.
இந்நிலையில் பொறியியல் கல்லூரி 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்த அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பில், மே 21 ஆம் தேதி வரை வகுப்புகள் நடக்கவுள்ளன. பொறியியல் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 24 முதல் தொடங்கும். ஜூன் 2 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் செய்முறைத் தேர்கள் தொடங்குகின்றன, ஏப்ரல் 26 அன்று எழுத்துத் தேர்வுகள் தொடங்க உள்ளன. மேற்குறிப்பிட்ட தேதி அட்டவணை, எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி மாணவர்களுக்கும் பொருந்தும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.