சென்னை, நவ. 25 - சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி 19 வது பட்டமளிப்பு விழா, சிமாட்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை களைச் சேர்ந்த 575 மாண வர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தி னராக சென்னை, ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டு மாண வர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டிப் பேசினார். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை பல்லைக்கழக வேந்தர் என்.எம். வீரை யன் மற்றும் சிறப்பு விருந் தினர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்த விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் வி. காமகோடி கூறுகையில், தன்னிறைவு பெற்ற தேசத்தைக் கட்டி யெழுப்ப இளைஞர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றார். முன்னதாக துணை வேந்தர் சதாரம் சிவாஜி வர வேற்றார். சிமாட்ஸ் பல் கலைக்கழக கல்வியியல் இயக்குனர் தீபக் நல்லாசாமி கல்லூரி இயக்குனர் ரம்யா தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவாளர் ஷீஜா வர்கீஸ், கல்லூரியின் முதல்வர் ரமேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.