கரூர், ஆக.13 - அரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைத்த தால், பொறியியல் கல்லூரியில் அளித் திருந்த சான்றிதழ் மற்றும் முன் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் தந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர். இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குட் பட்ட இனுங்கூரை சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் விவசாயக் கூலி வேலை செய்து வரு கிறார். இவரது மகன் ஜெகதீஷ் (18) நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து கரூர் புலியூர் செட்டி நாடு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக தனது நண்பருடன் சேர்ந்து, ஜூலை 26 ஆம் தேதி ஜெகதீஷ் ரூ.5,500-ஐ செலுத்தி விண்ணப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் அந்த மாணவருக்கு இடம் கிடைத்துள்ளது. எனவே பொறியியல் கல்லூரியில் சேர்க்கையின் போது, மாண வர் கொடுத்திருந்த சான்றிதழ் மற்றும் முன் பணம் ரூ.5,500-ஐ திருப்பி கொடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் செட்டிநாடு பொறியியல் நிர்வா கம் சான்றிதழை திருப்பி கொடுக்க மறுத்தது டன் மாணவன் மற்றும் அவரது தந்தையிடம் மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர்.
இதனை கண்டித்தும், தனது சான்றிதழ் மற்றும் முன் பணமாக செலுத்திய தொகை யையும் உடனடியாக கல்லூரி நிர்வாகம் வழங்கிட கோரிக்கை விடுத்து, கல்லூரி நுழைவுவாயில் முன்பு மாணவர் ஜெகதீஸ், அவரது தந்தை ராஜாங்கம் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி யின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன், கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து மாணவரின் சான்றிதழ்கள் மற்றும் முன் பணத்தை பெற்று தருவதாக உறுதியளித்தனர். பின்னர் தந்தையுடன் கல்லூரி அலுவலகத்திற்கு சென்ற ஜெகதீஷிடம், சான்றிதழ் மற்றும் முன் பணத்தை கல்லூரி நிர்வாகம் வழங்கியது.