tamilnadu

img

சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து!

சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல், மரக்காணம், மாமல்லபுரம் இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று பகல் 12.15 மணி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 044-25330952, 044-25330953 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.