tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

மின்சார ரயில்சேவை ரத்து:  பொதுமக்கள் பெரும் அவதி

சென்னை, அக்.27- சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் இருந்து பொதுமக்கள் மின்சார ரயிலில் வந்து மாம்பலம் ரயில் நிலை யத்தில் இறங்கி தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஷாப்பிங் செய்வது வழக்கம். மேலும் குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியும் அங்குள்ள கடைகளில் ஷாப்பிங் செய்வார்கள். அதேபோல் வண்ணாரப்பேட்டையில் ஷாப்பிங் செய்ய செல்லும் பொதுமக்கள் சென்னை கடற்கரை வரை மின்சார ரயிலில் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வண்ணாரப்பேட்டைக்கு சென்று ஷாப்பிங் செய்வார்கள். இதன் காரணமாக தீபாவளி ஷாப்பிங் செய்ய நினைத்த பொதுமக்கள் ஞாயிறன்று மின்சார ரயில்களை நம்பி இருந்தனர். இந்த நிலையில் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஞாயிறன்று (அக்,7)  அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை, வழக்கமாக இயக்கப்படும் 60 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கான அறிவிப்பை சென்னை ரயில்வே கோட்டம் திடீரென வெளியிட்டது. இதற்கு மாற்றாக, 20 நிமிட இடைவெளியில் இரு மார்க்கத்திலும், 35 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்தது. அதேபோல் சென்னை கடற்கரை-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்திலும், ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் 60 மின்சார ரயில்களை ரத்து செய்தது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் சென்னை தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தீபாவளி ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் அனைத்து ரயில்களிலுமே கடும் நெரிசல் காணப்பட்டது. நெரிசல் காரணமாக ரயிலில் ஏற முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தி.நகர், குரோம்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளுக்கு தீபாவளி ஷாப்பிங் செய்வதற்காக பொதுமக்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு பேருந்துகளிலேயே வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது.

போச்சம்பள்ளி  வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை 

கிருஷ்ணகிரி, அக்.27- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில்  ஞாயிற்றுக்கிழமைதோறும் நடந்து வரும் வாரச் சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணா மலை, சேலம், திருச்சி பகுதிகளில் இருந்து, விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.  வரும் வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் கறிக்கடைக்காரர்கள் ஆடுகளை வாங்கக் குவிந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.  ஒரு கிடாய் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையும், வெள்ளாடு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரையும் விற்பனை யானதாகவும், ஞாயிறன்று கூடிய சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மலர் மருத்துவமனை  ஊழியர்களுக்கு போனஸ்

சென்னை, அக். 27 - எம்.ஜி.எம் ஹெல்த்கேர் - மலர் அடையார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு  போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கும் ஊழியர் சங்கத்திற்கும் இடையே போனஸ் -கருணைத் தொகை தொடர் பான பேச்சுவார்த்தை நடை பெற்றது. இந்த பேச்சு வார்த்தை யில் நிர்வாகத்தின் சார்பில் மனித வள மேம்பாட்டு துறை மேலாளர் நீல் மற்றும் இத்திஸ்ரியும், சங்கத்தின் சார்பில்  கவுரவ தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர், கவுரவ துணைத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயல் தலைவர் எம்.இன்பரசி, பொதுச் செயலாளர் ஆர். ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில், உச்ச வரம்பின்றி 19 விழுக்காடு போனஸ் வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இதன்படி ஊழி யர்களுக்குரூ.55 ஆயிரம் முதல் 98 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும்.

மின்சாரம் துண்டிப்பு   நடுவழியில் நின்ற  ரயில்கள் நிறுத்தம்

சிதம்பரம், அக் 27- மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு செல்லும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 மணிக்கு கொள்ளிடம் ரயில் நிலையத்திற்கு வந்தது.    இந்த ரயில் கொள்ளிடம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் போது மின் பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.  அதேபோல் கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயிலும் கொள்ளிடத்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது . இதனை அறிந்த ரயில்வே ஊழியர்கள் மின் வழி பாதையை சரி செய்தனர். அதன் பின்னர் 1 மணி நேரம் காலதாமதமாக 3 ரயில்களும் புறப்பட்டு சென்றது.

சென்னையில் அனல் நீடிக்கும்

சென்னை, அக்,27 அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் அதிகபட்ச மாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கலாம் என்றும் தெரி வித்துள்ளது.