districts

img

ராமானுஜர் பெயரில் கல்லூரி திருப்பெரும்புதூரில் அமைக்கக்கோரிக்கை

காஞ்சிபுரம், அக். 27- திருப்பெரும்புதூரில் ராமானு ஜர் பெயரில் அரசு கலைக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்று சிபிஎம் திருப்பெரும்புதூர் வட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருப்பெரும்புதூரில் நடை பெற்ற மாநாட்டை காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் மாநாட்டை துவக்கிவைத்து பேசி னார். வட்டச் செயலாளர் ப.வடிவேலன் வேலை அறிக்கையை சமர்ப்பிக்க, மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், முன்னாள் வட்டச் செயலாளர் டி.லிங்க நாதன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மூத்த உறுப்பினர் பாலாஜி  செங்கொடியை ஏற்றிவைத்தார். வட்டக்குழு உறுப்பி னர் ஆர்.சுகுந்தன் வரவேற்றார். எம்.ராஜசேகர் நன்றி கூறினார். தீர்மானம் ஹூண்டாய், என்.எஸ்.கே தொழிற்சாலைகளில் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்காக ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும். திருப்பெரும்புதூர் பகுதிகளில் உயர்த்தப்பட்ட அனைத்து விதமான வரி களையும் குறைத்து. அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் வழங்க வேண்டும். திருப்பெரும்புதூர் புறவழிச் சாலையில் ராஜீவ்காந்தி நினைவகம் அருகில் விரைந்து மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. புதிய வட்டக்குழு தேர்வு மாநாட்டில் 10பேர் கொண்ட திருப்பெரும்புதூர் வட்டக்குழு செயலாளராக ப.வடிவேலன் தேர்வு செய்யப்பட்டார்.