districts

img

பனப்பாக்கம் புதிய சிப்காட்டில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அரக்கோணம் - நெமிலி மாநாடு கோரிக்கை

ராணிப்பேட்டை, அக். 27 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின், அரக்கோணம் வட்ட 12வது மாநாடு ஞாயிறன்று (அக். 27) ஆர். வெங்கடேசன், எல்.எஸ். வெண்ணிலா, கே. சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.  புதூர் செயலாளர் எம்.ராஜா கொடியேற்றி வைத்தார். என். குணசங்கர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சி. செல்வமணி வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் எபிஎம். சீனிவாசன் வேலை அறிக்கையையும் சு.தென்னரசு வரவு-செலவு அறிக்கையைம் தாக்கல் செய்தனர். மாவட்ட குழு உறுப்பினர் டி. சந்திரன் மாநாட்டை முடித்துவைத்துப்பேசினார். டி. பலராமன் நன்றி கூறினார். முன்னதாக அரக்கோணம் வட்ட அலு வலகத்தில் செங்கொடியை சி. துரைராஜ் ஏற்றிவைத்தார். புனரமைக்கப்பட்ட ஆர். ரங்கராஜன் நினைவரங்கிலிருந்து என். சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவு செங்கொடி பயணத்தை கட்சியின் மூத்த உறுப்பினர் து. சுந்தரமூர்த்தி துவக்கிவைத்தார்.  தீர்மானங்கள் நெமிலி அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும். பனப்பாக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் சிப்காட்டில் அரக்கோணம், நெமிலி தாலுகாவை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அரக்கோணம் நகர் பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டார குழு தேர்வு  11 பேர் கொண்ட அரக்கோணம் & நெமிலி தாலுகா குழுவுக்கு செயலாளர் ஆர். வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டார்.