districts

img

அரசு பன்னோக்கு மருத்துவமனை: வேளச்சேரி பகுதி மாநாடு கோரிக்கை

சென்னை, அக். 27 - வேளச்சேரி தொகுதியில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேளச்சேரி பகுதி மாநாடு வலியுறுத்தி உள்ளது. கட்சியின் 5வது பகுதி மாநாடு ஞாயிறன்று (அக்.27) தரமணி யில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க வேண்டும், உட்புறச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெ.கோபால், பி.ரமேஷ் தலைமையில் கொண்டு வரப்பட்ட தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா நினைவுச் சுடரை மூத்த உறுப்பினர் மயிலைபாலு பெற்றுக் கொண்டார். கே.ராமமூர்த்தி, ஏ.குமரேசன் தலைமையில் கொண்டு வரப்பட்ட தோழர் கே.தமிழ்ச்செல்வன் நினைவு கொடியை மூத்த உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன் பெற்றுக் கொண்டார். செங்கொடியை மூத்த உறுப்பினர் எல்.ஜெய சுந்தரி ஏற்றினார். கண்காட்சியை மாவட்டக்குழு உறுப்பி னர் வெல்கின் திறந்து வைத்தார். பொதுமாநாட்டிற்கு பகுதிக்குழு உறுப்பினர் என். குமரன் தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர்  கே.பாரதிராணி வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை பகுதிக்குழு உறுப்பினர் ஜெ.கோபால் வாசித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தொடக்க வுரையாற்றினார். வேலை அமைப்பு அறிக்கையை பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபியும், வரவு,செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரனும் சமர்ப்பித்தனர். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, ச.லெனின் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு தேர்வு 13 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக எஸ்.முகமது ரஃபி தேர்வு செய்யப்பட்டார்.