districts

img

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர நிழற்குடை

திருவள்ளூர், அக். 27- கும்மிடிப்பூண்டி பேருந்து நிலை யத்திற்கு  நிரந்தரமாக நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலை யத்திலிருந்து பொன்னேரி, திரு வள்ளூர், செங்குன்றம், சென்னை போன்ற பகுதிகளும் அரசு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. தினமும்  நூற்றுக்கணக்கான பயணிகள் தங்களின் பல்வேறு பணிகள்  நிமித்தம் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர்.   பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு நிரந்தரமாக நிழற்குடையை பேரூராட்சி நிர்வாகம் அமைத்து தரவில்லை. இதனால் பயணிகள் அருகில் உள்ள  கடைகளில் மழைக்கும், வெயி லுக்கும் ஒதுங்குகின்றனர். தற்காலிக மாக ஒரு சிறிய கூரை மட்டும் போட்டுள்ளனர்.   இதில் மனிதர்களோடு சேர்ந்து கால்நடைகளும் ஒதுங்குகிறது. சி.எச்.சேகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது. அதுவும், வரதா புயலின் போது சேதமடைந்து. அதன் பிறகு இதுவரை  நிழற்குடை அமைக்கவில்லை. இந்த நிலையில் சிபிஎம் சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திற்கு நிரந்தர மாக நிழற்குடை, குடிநீர், சுற்றுச்  சவர் எழுப்ப  வேண்டும், கழி வறையை சுத்தம் செய்ய வேண்டும், பேருந்துகளுக்கு நேர காப்பாளரை நியமிக்க வேண்டும், தனியார் வாகனங்களின் பார்க்கிங் இடமாக உள்ளதை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி யுறுத்தி கும்மிடிப்பூண்டி பஜாரில் அக் 21 அன்று வணிகர்களிடம், சிறு கடை வியாபாரிகள், பொது மக்கள், பள்ளி மாணவர்கள் என சகல தரப்பினரிடமும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மக்களும் முக்கியமான கோரிக்கை என உற்சாக மாக கையெழுத்திட்டனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அக் 25 அன்று இக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்த நிலையில்  அக் 22 அன்று சென்னை மாதவரத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வழியாக திருப்பதி செல்லும் புதிய பேருந்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி யில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு,  புதிய பேருந்தை துவக்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், இதுவரை 5  வழித்தடங்களில் அரசு பேருந்துகளை இயக்கியிருக்கிறோம்.  ஏற்கெனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளையும் மீண்டும் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திற்கு நிரந்தரமாக நிழற்குடை  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். பேரூ ராட்சிக்கு உட்பட்ட மூன்று குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலை யம் அருகிலிருந்து  மின்சார வாரிய அலுவலகம் வழியாக வரும் மழைநீர் ஓடையை சொந்த செலவில் சுத்தம் செய்துள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.  இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. சிபிஎம்  வட்டச் செய லாளர் டி.கோபாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் இ.ராஜேந்திரன், ஜி.சூரிய பிரகாஷ், வட்டக் குழு உறுப்பினர்கள் வி.ஜோசப், குப்பன், டிக்சன், கிளைச் செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.