districts

img

நீதிமன்ற தீர்ப்பைக் காட்டி குடியிருப்புகளை அப்புறப்படுத்தாதீர் சிபிஎம் ஆவடி மாநாடு வலியுறுத்தல்

சென்னை, அக். 27- நீதிமன்ற தீர்ப்பைக் காட்டி குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது என சிபிஎம் ஆவடி தொகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் ஆவடி தொகுதி 15ஆவது மாநாடு ஆவடியில்  தோழர்கள் சண்முகவேல், ராமச்சந்திரன், செல்வரத்தினம், பாலகிருஷ்ணன் நினைவரங்கில் ஞாயிறன்று (அக். 20) நடைபெற்றது. மூத்த உறுப்பினர் சி.சடையன் கட்சிக் கொடியை ஏற்றினார். கல்வெட்டை மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். தொகுதிக்குழு உறுப்பினர் மா.பூபாலன் தலைமை தாங்கினார். எஸ்.வேம்புலி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தொகுதிக்குழு உறுப்பினர் மா.பூபாலன் வேலை அறிக்கையையும், தொகுதிக்குழு உறுப்பினர் எம்.ராபர்ட்ராஜ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலகுழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக ஆர்.சரவணன் வரவேற்றார். என்.கே.ரவிக்குமார் நன்றி கூறினார். தீர்மானங்கள் தமிழ்நாடு அரசு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும், ஆவடியில் விடுபட்ட பகுதிகளில் உடனடியாக மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை அமைக்க வேண்டும், முறையாக தினசரி குடிநீர் வழங்க வேண்டும், சேதமடைந்த உட்புறச் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதிக்குழு தேர்வு 9 பேர் கொண்ட தொகுதிக் குழுவின் செயலாளராக அ.ஜான் தேர்வு செய்யப்பட்டார்.