tamilnadu

img

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர்கள் குழு நியமனம்

சென்னை
நாட்டின் புதிய கொரோனா மையமாக உள்ள தமிழ்நாட்டின் தலைநகர் மண்டலமான சென்னையில் இதுவரை 18 ஆயிரத்து 693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 3000-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 167 பேர் பலியாகியுள்ள நிலையில், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது. 

கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள பகுதிகளை தரம் பிரித்து ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் 3 நகரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி  

* தண்டையார்பேட்டை, மாதவரம், ராயபுரத்தை உள்ளடக்கிய மண்டலத்திற்கு - அமைச்சர் ஜெயக்குமார் 

* திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர்  உள்ளடக்கிய மண்டலத்திற்கு - அமைச்சர் உதயகுமார் 

* அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரை உள்ளடக்கிய மண்டலத்திற்கு -  அமைச்சர் கே.பி.அன்பழகன் 

* அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர்  உள்ளடக்கிய மண்டலத்திற்கு - எம்.ஆர்.விஜயபாஸ்கர் 

* வளசரவாக்கம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலத்திற்கு -  அமைச்சர் காமராஜ்