tamilnadu

img

‘பாலஸ்தீனம்: போர்க்களம்+காதல் புறாக்கள்’ நூல் வெளியீடு

‘பாலஸ்தீனம்: போர்க்களம்+காதல் புறாக்கள்’ நூல் வெளியீடு

மருத்துவர் சி.ச.ரெக்ஸ் சற்குணம் எழுதி சிந்தன்புக்ஸ் பதிப்பித்துள்ள ‘பாலஸ்தீனம்: போர்க்களம்+காதல் புறாக்கள்’ நூல் வெளியீட்டு விழா வியாழனன்று (ஜன.15) சென்னை புத்தகக்காட்சியில் நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நூலை வெளியிட மொழிபெயர்ப்பாளர் வீ.பா.கணேசன் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் ஸ்தாபக பொதுச் செயலாளர் ஏ. ரைமண்ட் உடலுக்கு சென்னை கிளையின் அமைப்பின் தலைவர் டி.குருசாமி, செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஆதிமூலம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்

திருவள்ளுவர் தினமான வெள்ளியன்று (ஜன.16) புஷ்பாநகர் வள்ளுவர் குடியிருப்பில் உள்ள சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வி.செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கே.முருகேஷ், மாவட்ட குழு உறுப்பினர் வெ.ரவீந்திர பாரதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

 ராயபுரம் 53ஆவது வட்ட போஜராஜன் நகர் அமைப்புசாரா தொழில்களின் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா   செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, சங்கத்தின் பகுதிச் செயலாளர் டி.வெங்கட், தலைவர் ஜாவித், கட்டுமான சங்கத்தின் பகுதிச் செயலாளர் செல்வம், மாதர் சங்கத்தின் பகுதிச் செயலாளர் ஆபிதூனிஷா, வியாபாரிகள் சங்க செயலாளர் தமிம் சேட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.