சென்னை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து ஆக.14 ஆம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையில் தற்போது 101.10 அடி நீர் உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து ஆக.14 ஆம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். 120 நாட்களுக்கு திறக்கப்படும் 23,846,40 மில்லியன் கனஅடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.