சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள மருத்துவ உதவி மையத்தைத் திரும்பப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி ரயில்வே துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
தினமும் குறைந்தது 30 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. ஆனால் இரயில் நிலையத்தில் பயன்பாட்டிலிருந்த மருத்துவ உதவி மையம் கடந்த இரண்டு மாதங்களாகச் செயல்படாமல் இருக்கிறது.
இதனை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரச்சொல்லி தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.