tamilnadu

img

அண்ணா அறிவாலயம் - கலைஞர்

அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு இரண்டு - பாகங்கள் நூலை திராவிடர் கழக தலைவர் கி வீரமணி வெளியிட கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி. பெற்றுக் கொண்டார். விழாவிற்கு தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் தலைமை வகிக்க பேரவைத் தலைவர் கி.நடராஜன் வரவேற்றுப் பேசினார். நூல் ஆசிரியர் க.திருநாவுக்கரசு அறிமுக உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம். பி.எழிலரசன் எம்.எல்.ஏ, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்ஸ் என்.ஆர்.எஸ்.பெரியார் இணைப்புரையாற்றினார். நக்கீரன் பதிப்பகம் தி.சிற்றரசு நன்றி கூறினார்.