tamilnadu

img

அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவு தினம்…

அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவு தினம்…

தோழர்கள் அஞ்சான்- நாகூரான்- ஞானசேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு (ஜன.19) சிஐடியு காஞ்சிபுரம் கைத்தறி சங்க அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் கே. ஜிவா  தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர், மாநில துணை பொதுச்செயலாளர் இ.முத்துக்குமார்  கொடியேற்றி சிறப்புரையாற்றினார். தவிச மாநிலத் துணைச் செயலாளர் கே. நேரு மற்றும் மாவட்ட செயலாளர் என்.சாரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

ஜனவரி 19 தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவு தினத்தையொட்டி சிஐடியு வேலூர் மாவட்டக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் தியாகிகள் ஸ்தூபி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் டி.முரளி தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், மாவட்ட நிர்வாகிகள் மு.காசி, வி.நாகேந்திரன், சி.சரவணன், மாநகர தொழிற்சங்க கன்வீனர் சி.ஞானசேகரன், தவிச மாவட்ட தலைவர் சி.எஸ்.மகாலிங்கம், பொருளாளர் ஜி.நரசிம்மன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஏ.கதிர்அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.