அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டிய முதியவர் பலி
மதுரை, ஜன.20– மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்த சேகர் (68) கடந்த ஜன.17 அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டார். இந்நிலையில், கேட்டுக்கடை பகுதியில் வேடிக்கை பார்க்கும்போது மாடு முட்டியதில் தலையில் காயம் ஏற்பட்டு, அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப் பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு அனுப்பியிருந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை சிகிச்சை பல னின்றி சேகர் உயிரிழந்தார்.
நாட்டுவெடி வெடித்து விபத்து ஒருவரின் கை விரல்கள் சிதறி துண்டானது – வீடு சேதம்
சின்னாளபட்டி, ஜன.20- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில் பட்டியில், கணேசன் என்பவரின் வீட்டில் மர்மமான முறையில் வெடிபொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணேசனின் கை விரல்கள் சிதறி துண்டானது. மேலும் அவர் குடியிருந்த ஓட்டு வீட்டின் மேற்கூரை ஓடு கள் சேதமடைந்து சிதறின. காயமடைந்த கணேசன் உடனடி யாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்த தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் வெடி வெடித்த வீட்டில் சோதனை மேற் கொண்டு வருகின்றனர். விசாரணையில், காட்டு விலங்கு களை வேட்டையாட பயன்படும் நாட்டுவெடியை தயா ரிக்கும் போது அது தவறுதலாக வெடித்து விபத்து ஏற்பட்ட தாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி. மற்றும் சின்னாள பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து பேட்டரி, கரிமருந்து, திரி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆம்னி பேருந்து மோதி கணவன் -மனைவி பலி
தேனி, ஜன.20- பெரியகுளம் அருகே ஆம்னி பேருந்து மோதி இருசக் கர வாகனத்தில் சென்ற கணவன் -மனைவி பலியாகி னர். சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த வர் ராமகிருஷ்ணன்(45), ஆட்டோ மெக்கானிக். இவரது மனைவி முத்துமாரி(38). இவர்களுக்கு விஜயலட்சு மணன்(17), ராகுல்(15) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து திங்களன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தேவதானப்பட்டி தர்மலிங்கபுரம் அருகே வந்த போது சென்னையில் இருந்து தேனி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து இவர்கள் மீது மோதியது. இதில் அதே இடத்தில் இருவரும் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் ராபர்ட்கென்னடியை(46) தேவதானப் பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சிறுமிக்கு திருமணம் சின்னமனூர் அருகே கணவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு
தேனி, ஜன.20- சின்னமனூர் அருகே பள்ளி சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய கணவர் மீது போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, பள்ளிக் கோட்டைபட்டியைச் சேர்ந்த ராமர் மகன் திருமலை (22) என்பவர் காதலித்து வந்ததாகவும், மாணவியின் பெற்றோர் கேரளாவில் தங்கி வேலை செய்து வருவ தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமலை, பாதிக் கப்பட்ட மாணவியை யாருக்கும் தெரியாமல் கடந்த 20.12. 2024 இல் திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் அன்னமயில் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், போடி அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் காவல் ஆய்வாளர் மீனாட்சி, திருமலை மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சமூக ஊடக அறிவுரைகளால் உயிருக்கு ஆபத்து வெங்காரம் சாப்பிட்ட மாணவி பலி
மதுரை, ஜன.20- மதுரை செல்லூர் அருகில் உள்ள மீனாம்பாள்புரம் காம ராஜர் குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (51). இவ ரது மகள் கலையரசி(19). பிரபல தனியார் கல்லூரியில் முதலா மாண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப்பில் வீடியோ பார்த்துள்ளார். அப் போது ‘வெங்காரம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்’ என பதி விடப்பட்டிருந்த வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். இதனை நம்பி நாட்டு மருந்து கடையில் வெங்காரம் வாங்கி கடந்த சனிக்கிழமை சாப்பிட்டுள் ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு வந்த கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப் பதாக கூறியுள்ளார். வயிற்றுப் போக்குடன் சேர்ந்து அதிகள வில் ரத்தம் வெளியேறி உள்ளது. மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரி ழந்தார். வெங்காரம் என்றால் என்ன? வெங்காரம் (Borax/ Borate) என்பது சோடியம் டெட்ரா போரேட் (Sodium Tetraborate) வெள்ளை நிறத்தில், கற்கண்டு போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு கனிம உப்பு. இது துவர்ப்பு சுவையுடையது, சோடியம் போரேட் என வேதியியல் ரீதி யாக அழைக்கப்படுகிறது. இது தங்கம் உருக்கவும், சில குறிப்பிட்ட மருத்துவ முறை களில் சுத்திகரிக்கப்பட்ட பின்பே மிகக் குறைந்த அளவில் பயன் படுத்தப்படுவதாகும். வெங்காரம் உணவாக சாப்பி டுவது ஆபத்தானது. இது நச்சுத்தன்மை ஏற்படுத்தும். சிறிய அளவில் உட்கொண்டாலும் வாந்தி, குமட்டல், வயிற்று வலி ஏற்படும். அதிக அளவில் சிறுநீரக பாதிப்பு, மயக்கம், மரணம் வரை ஏற்படலாம்.
கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
தேனி, ஜன.20- கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ் ஜீத் சிங் அழைப்பு விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தீன்தயாள் உபாத்தி யாய கிராமப்புற திறன் பயி ற்சி திட்டமானது 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட கிரா மப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர் களுக்கு நிரந்தரமான மாதா ந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று தரு வதை குறிக்கோளாக கொண்டு 2012-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ட்ரோன் ஆப் ரேட்டர், மொபைல் போன் டெக்னீசியன், சிஎன்சி இயக் கம், செவிலியர் பயிற்சி, ஜீனி யர் சாப்ட்வேர் டெக்னாலஜி, Al அனலிஸ்ட், வெப் டெக் னாலஜி, வேர் ஹவுஸ் மேற் பார்வையாளர், ஆப்ரேட்டர், சோலார் டிவி அமைத்தல், வெல்டிங் அட்வான்ஸ் பேட்டன் மேக்கர், மெடிக் கல் டெக்னீசியன் போன்ற அதிக வேலைவாய்ப்பு உள்ள பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள இளை ஞர்கள் தேனி மாவட்ட திட்ட இயக்குநர் (மகளிர்திட்டம்) அலுவலகத்தை நேரில் அணுகி அல்லது 155330 என்ற தொலைபேசி எண் ணில் தொடர்பு கொண்டு பயிற்சி குறித்த தகவல் களை தெரிந்துக் கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள் ளார்.