tamilnadu

img

தமிழ்நாட்டில் 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல் : நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் தகவல்

தமிழ்நாட்டில் 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல் : நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் தகவல்

தஞ்சாவூர், மார்ச் 11 - தமிழ்நாட்டில் மட்டும் 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் நடப்பு நெல் கொள்முதல் பருவம் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் 8 ஆம்  தேதி வரை 3,496 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 34.50 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 4,02,971 விவசாயிகளுக்கு ரூ.8,716 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதேநாள் வரை 23.56 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கடந்த ஆண்டைவிட 11 லட்சம் டன்  அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட் டுள்ளது. நடப்பாண்டில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் இதுவரை 29.38 லட்சம் டன் நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 5,11,996 டன் நெல் நாள் தோறும் 40,000 டன் முதல் 45,000 டன்  வரை நகர்வு செய்யப்பட்டு வருகிறது. ரயில்மூலம் கடந்த அக்டோபர் முதல்  மார்ச் 8 ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங் களில் இருந்து 7.31 லட்சம் டன் நெல் நகர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங் களில் நெல் கொள்முதலுக்காக 1 கோடியே 42 லட்சத்து 11 ஆயிரத்து 279 சாக்குகள், 3,03,958 டன் சணல்கள், 27,610 பிளா ஸ்டிக் தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளன.  மாநில அளவில் 3.03 கோடி சாக்குகள் இருப்பில் உள்ளன. மேலும், 2022 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜன.15 வரை, 18  மாவட்டங்களில் 54 இடங்களில் 7.33 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மேற் கூரையுடன் கூடிய 383 நவீன நெல் சேமிப்புத் தளங்களை ரூ.825.79 கோடி யில் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு, அவற்றில் ரூ.331.08 கோடியில் 4.03 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 253 சேமிப்புத் தளங்கள் புதி தாகக் கட்டப்பட்டு, தமிழக முதல்வரால் பயன் பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 1 லட்சத்து  30 ஆயிரத்து 960 ஹெக்டேரில் நெல் பயி ரிடப்பட்டு, தற்போது வரை 1 லட்சத்து 6 ஆயி ரத்து 047 ஹெக்டேரில் (81 சதவீதம்) அறு வடை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பகு திகளில் தொடர்ந்து அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.