நாகை, புதுக்கோட்டையில் புதிய டைடல் பூங்கா அமைக்க அடிக்கல்
நாகப்பட்டினம்/புதுக்கோட்டை, மார்ச் 11 - நாகப்பட்டினம் மாவட்டம் காடம் பாடியில் புதிய டைடல் நியோ பூங்கா கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி யின் நேரலை புதனன்று சென்னை தலை மைச் செயலகத்திலிருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌத மன், மாவட்ட வருவாய் அலுவலர் வ. பவணந்தி ஆகியோர் பார்வையிட்டனர். காடம்பாடியில் ரூ.43.78 கோடியில், தரை மற்றும் மூன்று தளங்கள் 61,000 சதுரடி பரப்பளவுடன் கட்டப்படவுள்ள மூன்று மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இக்கட்ட டங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் இட வசதியுடன் குளிர்சா தன வசதிகள், ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு, 24x7 பாது காப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ள டக்கிய அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப் படவுள்ளன. இந்நிகழ்வில் நாகப்பட்டின நகர் மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார், மாநில ஆத்மா திட்டக் குழு உறுப்பினர் மகாகுமார், தமிழ்நாடு அரசு மீனவர் நலவாரிய உறுப்பினர் கோ.மனோகரன், டைடல் நியோ நிறுவன உதவி பொறியாளர் எஸ்.யுவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை கிராமத்தில் ரூ.36.78 கோடி யில் புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு காணொலி வாயிலாக புதன்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, நத்தம்பம் ணை ஊராட்சி, சிப்காட்டில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், “நத்தம்பண்ணை கிராமத்தில் ரூ.36.78 கோடியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 60,400 சதுர அடி பரப் பிலும், அதிநவீன உட்கட்டமைப்பு வசதி களுடன் புதிய டைடல் நியோ பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு முதல மைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சொந்த மாவட்டத திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உரு வாக்கப்படுவதுடன் சமூக-பொருளா தார வளர்ச்சி மேம்படுவதுடன், மாநிலத் தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த டைடல் பூங்கா உதவும்” என்றார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), மரு.வை.முத்து ராஜா (புதுக்கோட்டை), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்ட வருவாய் அலு வலர் ஹெ.மை.குழந்தைச்சாமி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
