மகாராஷ்டிராவில் சிபிஎம் மாபெரும் நடைபயணம் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பால்கர் பழங்குடியினர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளைப் பாதிக்கும் நீண்டகாலமாக நிலு வையில் உள்ள கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் அனைத்து தாலு காக்களில் இருந்து மாபெரும் நடை பயணம் திங்களன்று தொடங்கி யது. தஹானு தாலுகாவில் உள்ள சாரோட்டியில் தொடங்கிய இந்த நடைபயண பேரணியில் 50,000க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் திங்கட்கிழமை இரவு மனோரில் தங்கி ஓய்வெடுத்தனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தொடங்கிய நடைபயணம் பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றது. இந்த நடைபயணத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஆதிவாசி அதிகார் ராஷ்டி ரிய மஞ்ச் (ஏஏஆர்எம்) உள்ளிட்ட மக்கள் அமைப்புகள் பங்கேற் றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் அசோக் தாவ்லே (ஏஐகேஎஸ் தலைவர்), மரியம் தாவ்லே (மாதர் சங்க பொதுச்செயலாளர்), மாநிலச் செய லாளர் டாக்டர் அஜித் நவாலே, சிஐடியு மாநிலச் செயலாளர் வினோத் நிகோலே மற்றும் ஏஏ ஆர்எம் மாநில ஒருங்கிணைப்பா ளர் கிரண் கஹாலா உள்ளிட்டோர் நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்துகின்றனர். கோரிக்கைகள் வன உரிமைச் சட்டத்தைத் துல்லியமாகச் செயல்படுத்துதல்; கோவில் நிலங்கள், இனாம் நிலங் கள் மற்றும் அரசு நிலங்களைப் பயி ரிடுபவர்களின் பெயரில் மாற்று தல்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் சீரமைத்தல்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்தல்; பெசா சட்டத்தைச் செயல்படுத்து தல்; தொழிலாளர் சட்டத் தொகுப்புக ளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு எழுத்துப்பூர்வமாகவும், காலக் கெடுவுடனும் ஏற்கும் வரை ஆட்சி யர் அலுவலகம் முன்பு கால வரை யற்ற தர்ணா போராட்டம் நடத்தப் படும் என நடைபயணத்தில் பங்கேற்ற தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
