வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்
மதுரை, ஜன.20- வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஜனவரி 20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டி ருந்தது. இதன் முதல் நாளான செவ்வாயன்று, மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே மறியல் போராட் டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டம் மாவட்டத் தலைவர் நா.விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ. அனிதா வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ரா.சுப்புராஜ், சி.இந்திராணி, நா. வனிதா, மாவட்ட இணைச் செய லாளர்கள் கா.காத்தம்மாள், பெ. கார்த்திக்ராணி, க.முருகேஷ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பெ.சந்திர பாண்டி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா.தமிழ், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி.அய்யங்காளை ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தமிழ் நாடு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கள் சங்கத்தைச் சேர்ந்த வி.ச.நவ நீதகிருஷ்ணன் மறியல் போராட் டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தப் போராட்டத்தில், கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ரூ. 7,850 ஓய்வூதியம் வழங்க வேண் டும். பணிக்கொடையாக அமைப் பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமை யலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 350-க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டு, பழங்காநத்தம் அருகேயுள்ள திரு மண மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டனர். தேனி தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.லட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.சாந்தி கோரிக்கை களை விளக்கி பேசினார். மறிய லில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகிகள் அமுதா, பி.பிச்சையம்மாள் உட்பட 237 பேர் கைது செய்யப்பட்டனர்.
