states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

பீகாரில் ஊழல் மலிந்த ‘இரட்டை எஞ்சின்’ பாஜக கூட்டணி அரசு ஒடுக்குமுறையாளர்கள், ஊழல்வாதிகள், குற்றவாளிகள் மற்றும் பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு ஒரு நம்பகமான கருவியாக மாறிவிட்டது. வாக்குகளை விலைக்கு வாங்கி, பெண்களுக்கு எதிராகக் கொடுமைகளை இழைத்து வருகிறது.

மூத்த பத்திரிகையாளர் சந்தீப் சிங்

ஒருபுறம் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் பாஜக அரசாங்கம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறார். மறுபுறம், உங்களை நீங்களே எப்படி சங்கராச்சாரியார் என்று சொல்லிக்கொள்ளலாம் என பாஜக அரசாங்கம் அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இந்த நோட்டீஸை மட்டும் எதிர்க்கட்சிகள் கொடுத்தி ருந்தால் நிலைமையை யோசித்துப் பார்க்க வேண்டும்.

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

பல வருடங்களாக தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஆளுநர் பதவியில் இருப்பவர்கள், அரசியலமைப்பை பின்பற்ற வேண்டும். அரசியல்ரீதியாக செயல்படக் கூடாது. குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் மோதலில் ஈடுபடக் கூடாது.

சமாஜ்வாதி கட்சி

எங்கெல்லாம் அடிதடி நடக்கிறதோ, அங்கெல்லாம் பாஜகவினர் இருப்பார்கள். முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமை மற்றும் அதிகார போதை யில் இருக்கும் பாஜக தலைவர்கள் உத்தரப் ்பிரதேச மாநிலத்தின்  அமைதியைக் சீர்குலைத்து வருகின்றனர். பாஜகவை அகற்றுவதன் மூலம் உத்தரப்பிரதேசத்தைக் காப்பாற்றலாம்.