states

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

ஒற்றுமை..!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சிதறி இருந்ததால், பாஜகவும், கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன. மும்பை மாநகராட்சியில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூடக் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சியான சிவசேனாவை நம்பித்தான் இருக்க வேண்டும். இந்நிலையில்தான் அடுத்து வரும் மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலில் இணைந்து நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியிருக்கிறது. அதேவேளையில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் குறுக்குச்சால் ஓட்டுகிறது. அஜித் பவாருடன் கைகோர்த்துக் கொள்கிறார்கள். அக்கட்சியோ, பாஜக தலைமையிலான ஆட்சியில் பங்கேற்று, அஜித் பவார் துணை முதலமைச்சராக இருக்கிறார். இது ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் என்று கருதப்படுகிறது.

தாவல்

மணிப்பூர் மாநில ஆட்சியைக் கலைத்து விட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சியை நடை முறைப்படுத்தி 11 மாதங்கள் கடந்துள்ளன. தீயை மூட்டி விட்ட பாஜக, அதை அணைப்பது போலக் காட்டிக் கொண்டாலும், குடியரசுத்தலைவர் ஆட்சி நீடிப்பதையே விரும்புகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுதான் உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில், தோல்வி உறுதி என்பதால் அதைத் தள்ளிப் போடவும் வாய்ப்பு இருக்குமா என்று பார்க்கிறார்கள். தங்கள் பிளவுவாத அரசியல் மாநிலத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதையும், அனைத்துத் தரப்புமே அதிருப்தியில் உள்ளது என்பதையும் அக்கட்சியினர் புரிந்து கொண்டுள்ளார்கள். இதனால் கட்சி மாறச் சரியான சமயத்திற்காகக் காத்திருக்கிறார்கள். தேர்தல் அறிவித்தால் இந்தத் தாவல்கள் அரங்கேறும்.

பயங்கரம்

காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து பயங்கரவாதம் அதிகரித்தே வருகிறது. ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்டு, மக்களால் தேர்வு செய்யப் பட்ட மாநில அரசை வெறும் பொம்மையாக மாற்றி யுள்ள ஒன்றிய அரசு, பாகிஸ்தான் மீது பழி போட்டு  நகர்ந்து விடுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஏழு இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். நிதானமாகத் தாக்கியுள்ளனர். கையெறி குண்டுகளை முகாம்கள் மீது வீசியெ றிந்துள்ளனர். படை வீரர்களுக்கு மோசமாக செய்திகளு டன்தான் புத்தாண்டு தொடங்கியுள்ளது. சுமார் 25 பயங்கரவாதிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டி ருக்கிறார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரி விக்கின்றன.  

ரூ. 2,000

சத்தீஸ்கர் மாநில மதிய உணவு சமைய லர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். காலவரையற்ற போராட்டமாக அது மாறி யிருக்கிறது. கடந்த 22 நாட்களாகப் போராடுகிறார்கள். ஒரு நாளைக்கு ரூபாய் 66 மட்டுமே, அதாவது மாதத்தி ற்கு 2,000, அவர்களுக்கு ஊதியமாகத் தரப்படுகிறது. ஆளும் பாஜக அரசோ அசைய மறுக்கிறது. பொது வாகவே, விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கை களைப் பற்றி பாஜகவினர் கவலைப்படுவதேயில்லை. ஆனால், மதிய உணவு ஊழியர்கள் அரசை நிர்ப் பந்திக்கப் போராடுவதே தீர்வு என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.  “எத்தனை என்ஜின் இருந்தால் என்ன... வண்டியே இல்லாமல் அது மட்டும் இருப்பதால் என்ன பலன்” என்று அந்த ஊழியர்கள் குரல் எழுப்புகிறார்கள். இதில் அவலம் என்னவென்றால், அவர்கள் கேட்பதோ, ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 340 ரூபாய் தாருங்கள் என்பதுதான்.