states

img

இமாச்சலில் ஆப்பிள் விவசாயிகள் போராட்டம்

இமாச்சலில் ஆப்பிள் விவசாயிகள் போராட்டம்

இமாச்சலப் பிரதேச விவசாயிகள் சங்கம் மற்றும் இமாச்சல் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (இமாச்சல் செப் உத்பதக் சங்கம்) கீழ் திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் மோடி அரசு மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று சிம்லாவில் உள்ள தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியாக சென்றனர். ஆப்பிள் போன்ற பழங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால், இந்தியச் சந்தைகளில் மலிவான வெளி நாட்டுப் பழங்கள் குவியும் அபாயம் உள்ளது. இது இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 15 லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் என போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் எச்சரித்தனர்.