states

img

பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை

பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை

புதுதில்லி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக 100% இறக்கு மதி வரி விதிக்கப்போவதாக எச்சரித்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க பரிந்துரை செய்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் (இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிற உறுப்பு நாடுகள்) மத்திய வங்கிகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்க ளை ஒன்றோடொன்று இணைக்க ரிசர்வ் வங்கி  பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்க முடியும் என்றும், இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்று நடத்தவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முக்கியப் பொருளாக சேர்க்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தகத்தில் அமெ ரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைத்து, அந்தந்த நாடுகளின் உள்நாட்டு டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இருப்பினும், இது ‘டாலருக்கு எதிரானது அல்ல’.  மாறாக இந்திய ரூபாயின் மதிப்பை உலகள வில் வலுப்படுத்தவும் வர்த்தகச் செலவைக் குறைக்கவும் எடுக்கப்படும் முயற்சி என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இ - ரூபி சர்வதேச வர்த்தகத்திற்கும், ரூபாய் மதிப்பை பாதுகாக்கவும் ரிசர்வ் வங்கி, கடந்த 2022 டிசம்ப ரில் “இ - ரூபி (e rupee)” என்ற டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டது. தற்போது 70 லட்சம் வாடிக்கையா ளர்கள் “இ - ரூபி” கரன்சியை வாங்கியுள்ளனர். நாம்  பயன்படுத்தும் ரூபாயும், டிஜிட்டல் கரன்சியும் ஒரே மதிப்புடையவையாகும். டிஜிட்டல் கரன்சி நேர டியாக ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படுவதால், சர்வதேசச் சந்தையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும், டிஜிட்டல் கரன்சியை பாதிக்காது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் சோதனை அடிப்படை யில் டிஜிட்டல் கரன்சி வைத்துள்ளன. இவற்றுள் டிஜிட்டல் யுவானை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.