tamilnadu

img

சபரிமலைக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை

சபரிமலைக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை 

என்எஸ்எஸ் காட்டம்

கோட்டயம் மத்தியில் ஆட்சி செய்தாலும், இந்துக்க ளின் ஏகபோகம் என்று கூறிக்கொண்டா லும் பாஜக, சபரிமலைக்கு எதுவும் செய்யவில்லை என்று நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் நாயர் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,“சபரிமலையில் எந்த வளர்ச்சியையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. சபரிமலை யில் விமானமும், ரயிலும் வரும் என்று கூறி அதைக் கொண்டு வரவில்லை. கடந்த 10 ஆண்டு களாக ஒன்றிய அரசை பாஜக நடத்துகிறது. இந்துக்களின் ஏகபோகத்தை பாஜக கையகப் படுத்தக் கூடாது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைவது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டம் இயற்ற பாஜக தயாராக இல்லை. சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கில் விசாரணை சரியான திசையில் உள்ளது. அது தந்திரியாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி, அவர்கள் குற்றம் செய்தி ருந்தால், கைது செய்யப்படுவர். தந்திரி கட வுளுக்குச் சமமானவர் என்று நினைக்காதீர்கள். இந்த நிகழ்வுகள் எதுவும் சபரிமலையைப் பாதிக்காது. திருச்சூரை பிடித்தது போல் என்எஸ்எஸ்-ஐ பிடித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். காங்கிரஸ் கட்சி வி.டி.சதீசனை (எதிர்க்கட்சி தலைவர்) அவிழ்த்து விட்டுள்ளது. இது இப்படியே போனால், தேர்தலில் காங்கிரஸ் தோற்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். சதீசன் என்எஸ்எஸ்-ஐ மட்டுமல்ல, பிற சமூக அமைப்புகளையும் ஆணவத்துடன் விமர் சித்தார்.  அவரிடம் பண்பு தேவை.  சரியல்ல முதலமைச்சரின் காரில் ஏறியதற்காக (ஐயப்ப சங்கமத்தின்போது) வெள்ளாப்பள்ளி நடேசனை விமர்சிப்பது சரியல்ல. வெள்ளாப் பள்ளி சில அமைப்புகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். முஸ்லிம் லீக் என்று சொன்னால், அது முஸ்லிம்களை குறிப்பிடுவது ஆகாது. முதலமைச்சர் பினராயி விஜயன் மரி யாதையுடன் நடந்து கொள்கிறார். அமைப்பின் (என்எஸ்எஸ்) கோரிக்கைகளை அவர் அதிகாரப்பூர்வமாகக் கேட்கிறார். அவரிடம் ஒரு போதும் தனிப்பட்ட முறையில் எதையும் கேட்ட தில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.