பட்டியல் சமூக தலைவரை தேசியக்கொடி ஏற்றவிடாமல் தடுத்தவர் மீது நடவடிக்கை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
வேலூர், செப்.5 - குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி ஊராட்சி அரசு பள்ளியில் சுதந்திர தின விழாவின் போது கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் குமாரை தேசியக்கொடியை ஏற்ற விடாமல் தடுக்கப்பட்டதை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் முதன்மை கல்வி அலுவல ரிடம் மனு அளித்தனர். கடந்த ஆக.15 அன்று அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் அழைப்பின் பேரில் கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சி.ரமேஷ் குமார் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு அழைக்கப்பட்டார். பள்ளி நிர்வாகத்தால் அறி விக்கப்படுவதற்குள் சாதிய ஆணவத்தோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவரான க.மோட்டூர் கிரா மத்தைச் சேர்ந்த சபாபதி என்பவர், ஒரு தலித் ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றக்கூடாது என்ற சாதிய திமிரோடு தானே சென்று தேசியக் கொடியை ஏற்றி அவமதித்துள்ளார். இதுகுறித்து கேட்ட ஊராட்சி மன்ற தலைவரையும் மிரட்டி தகாதவார்த்தையில் பேசியுள்ளார். இதுகுறித்து குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த ஆக.18 அன்று ஊராட்சி மன்ற தலைவர் புகார் மனு அளித்தார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தக வலறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்ட நிர்வாகிகள் கல்லப்பாடிக்கு நேரடியாக சென்று விசாரித்தனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவரை தேசியக் கொடியேற்ற விடாமல் தடுத்து அவமானப்படுத்திய சபாபதி மீது சட்டரீதி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்குமாருக்கு தக்க பாதுகாப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட தலை வர் பி.காத்தவராயன், செய லாளர் வே.குபேந்திரன், துணைத் தலைவர் கே.சாமிநாதன் ஆகியோர் மனு அளித்தனர். பின்னர் இதே பிரச்சனை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் மனு அளித்தனர்.