tamilnadu

img

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 75 விழுக்காடு இடங்கள் நிரம்பின...

சென்னை:
மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் இதுவரையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 75 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பிற் கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ளநேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 18ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. இந்த வருடம்அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 420 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.சிறப்பு பிரிவு கலந்தாய்வு 18 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக பொதுப் பிரிவு கலந்தாய்வு நடந்து வருகிறது. வெள்ளிக் கிழமை (டிச.4) பங்கேற்க 472 மாணவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அதில் 453 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 148 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்தனர். சுயநிதி கல்லூரிகளில் 217 பேர் சேர்ந்தனர்.அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 19 பேர் பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்தனர். முடிவில் 384 இடங்கள் நிரம்பின. இதுவரையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 75 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. தற்போது அரசு கல்லூரிகளில் 711 எம்.பி.பி.எஸ். இடங்களும், 127 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.சுயநிதி கல்லூரிகளில் 728 எம்.பி.பி.எஸ். இடங்களும், 985 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். 7ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.