கல்வராயன்மலையில் மாபெரும் கன்று பேரணி
கள்ளக்குறிச்சி, அக். 10- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை மட்டப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பாக மாபெரும் கன்று பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தொடங்கி வைத்தனர். இந்த கன்றுப் பேரணியில் 120 பால் உற்பத்தியாளர்கள் தங்களது கன்றுகளுடன் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக கன்றுகளை பராமரிக்கும் உற்பத்தியாளர்களுக்கு துறை சார்ந்த வல்லுனர்களால் பால் கேன் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த பேரணியில் கள்ளக்குறிச்சி ஆவின் பொது மேலாளர் ஜோஸ் பின் தாஸ், கல்வராயன் மலை ஒன்றிய குழு தலைவர் சந்திரன், கால்நடை மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.