tamilnadu

img

கோயம்பேடு மார்க்கெட்டில் 60 கடைகளுக்கு சீல்

சென்னை, மே 29 - சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 60 கடைகளை மூடி சீல் வைக்கப்பட்டது

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் பராமரித்து வருகிறது. இந்த வளா கத்தில் உள்ள கடைகள் 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். உரிமம் புதுப்பிக்கப்படாத கடைகளை அவ்வ ப்போது அதிகாரிகள் மூடி சீல் வைத்து வரு கின்றனர்.

2021 - 2024 ஆம் ஆண்டில் உரிமம் புதுப்பிக்க கடைகளை ஆய்வு செய்த அதி காரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி, காய்கறி அங்காடியில் 39 கடைகள், கனி அங்காடியில் 9 கடைகள், மலர் அங்காடியில் 12 கடைகள் என மொத்தமாக 60 கடைகள் மூடி சீல் வைத்தனர். மேலும், உரிமமின்றி வியா பாரம் நடத்தி வரும் கடைகளின் மீதான தொடர் நடவடிக்கையும் எடுத்து வரு கின்றனர். கடை உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மே 31ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.