tamilnadu

img

சென்னையில் இருந்து பார்சலில் அனுப்பிய 52 சவரன் நகை மாயம்!

சென்னையிலிருந்து காயல்பட்டினத்திற்கு பார்சல் மூலம் அனுப்பப்பட்ட 52 சவரன் நகை காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயல்பட்டினம் எம்.எம். கோல்டு கடை உரிமையாளர் அபுதாகீருக்கு, அவரது நண்பர் ஆரிஸ், சென்னையிலிருந்து 52 சவரன் நகையை பார்சல் மூலம் நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார்.
ஆனால், அந்த நகை இருந்த பார்சல் காணவில்லை என்று பேருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அபுதாகீர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.