மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றம் செய்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாவுக்கு எதிராக சிபிஎம் மநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை வழங்க இருப்பதாகப் பாஜகவினர் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள். 100 நாட்கள் வேலை உத்தரவாதம் கட்டாயம் என்று சட்டம் இருந்தபோதே, மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் வேலை கிடைத்தது.
தற்போது, அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. காகிதத்தில் சர்க்கரை என்று எழுதி அதை சுவைத்தால் இனிக்காது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
