states

img

வட மாநிலங்களில் அதிதீவிர மூடுபனி தில்லிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

வட மாநிலங்களில் அதிதீவிர மூடுபனி தில்லிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

புதுதில்லி நாட்டில் குளிர்காலம் தீவிரம டைந்துள்ளது. தென் மாநிலங்களில் இயல்புக்கு மாறாக குளிர் நிலவி வரும் நிலையில், வடமாநிலங்களில் பனிப் பொழிவுக்கு நிகராக மூடுபனி நிலவி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநிலங்களில் வெள்ளிக்கிழமை அதிதீவிர மூடுபனி நிலவியது. உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா, பரேலி, சஹாரன்பூர், கோரக்பூரில், பஞ்சாப் மாநி லத்தின் அம்பாலா, அமிர்தசரஸ், பதிண்டா, லூதியானா மற்றும் அடம்பூர், தில்லியின் சப்தர்ஜங், ஹரியானாவின் சில பகுதிகள், மத்தி யப்பிரதேசத்தின் குவாலியர், பீகாரின் பாகல்பூர் மற்றும் ஜார்க்கண்டின் டால்டோங்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மூடுபனி காரணமாக பூஜ்ஜிய மீட்டரில் பார்வைத் திறன் (சாலைகளில் எதுவும் தெரியவில்லை) இருந்தது. குறிப்பாக பஞ்சாப் முதல் பீகார் வரையிலான கங்கை சமவெளிப் பகுதிகளில் சாலை, ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டன. காற்று மாசுவுடன் தள்ளாடும் தில்லிக்கு மூடுபனிக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி வரை தில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவியது. காற்று மாசுபாட்டின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் அங்கு சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியதால் தில்லி சாலைகள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பகுதி போல வெறிச்சோடின.