அதானிக்காக பறிக்கப்படும் விவசாய நிலங்கள் லக்னோவில் 14 மாதங்களாக தொடரும் போராட்டம்
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலம் லக்னோ வில் உள்ளது சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலை யம். இந்த விமான நிலையம் தற்போது பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி குழு மத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் விரி வாக்கப் பணிகளுக்காக விவசா யிகளின் நிலங்கள் வலுக்கட்டாய மாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த விரிவாக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக கால வரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக, அனைத்துப் பருவ காலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போரா ட்டத்தில், பெண் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றுத் தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் இந்த இடை விடாத போராட்டத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத் திலிருந்தே தனது ஆதரவை வழங்கி வருகிறது. இந்நிலையில், சிபிஎம் மூத்த தலைவரான சுபாஷினி அலி போராட்டக் களத்திற்கு நேரில் சென்று விவசாயிகளின் போராட் டத்திற்குத் தனது முழு ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் கலந்துரையாடிய அவர்,”விவசாய நிலத்திற்கான இந்தப் போராட்டத்தைப் பெண் கள் முன்னின்று நடத்துவது ஒட்டு மொத்த நாட்டிற்கே ஒரு ஊக்கமா கும். அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு எதிரான இந்த நில உரிமைப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நிற்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மது கார்க், மாநிலக் குழு உறுப்பினர் நவாப் உதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.
