tamilnadu

img

ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் நாடாளுமன்றத்தில் மோடி அரசு ஒப்புதல்

ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் நாடாளுமன்றத்தில் மோடி அரசு ஒப்புதல்

புதுதில்லி ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என நாடாளுமன்றத்தில் மோடி அரசு ஒப்புக்கொண்டது.  நாட்டை விட்டு வெளியேறும் இந்தியர்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பான கேள்விக்கு ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சகம் நாடாளு மன்றத்தில் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில், இந்தியாவில் 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கொரோனா காலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் காரண மாக இந்த எண்ணிக்கை 2020இல் சுமார் 85,000 ஆகக் குறைந்தது. இருப்பினும், கொரோ னாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 9,00,000 க்கும் மேற்பட்ட குடிமக்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளனர். 2011 முதல் 2024 வரை, மொத்தம் 2.6 கோடி குடிமக்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.  பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் தனிப்பட்டவை என அதில் மழுப்பலாகக் கூறப்பட்டுள்ளது.