tamilnadu

img

விபி ஜி ராம் ஜி மசோதா நகலை எரித்து விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

விபி ஜி ராம் ஜி மசோதா நகலை எரித்து விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை, டிச. 19 - நூறுநாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக் கட்டும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ‘விபி ஜி ராம் ஜி’ சட்ட மசோதாவைக் கண்டித்தும், அதனை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி யும், தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவோடு அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் அமல்படுத்தப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஊரக வேலைத்திட்டம் செயல்  படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாங்கும் சக்தியில் சிறிது உயர்வு ஏற்பட்டது. பல்லா யிரக்கணக்கான கிராமங்களின் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஒன்றிய பாஜக அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று முடிவு கட்டி, நிதி ஒதுக்கீடு குறைப்பு, திட்டம் செயல்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள் தொழில் நுட்ப நடவடிக்கைகள் என தொடர்ந்து திட்டத்தை சிதைக்கும் வேலையில் ஈடுபட்டது. தற்போது, ஒரேயடியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை பெய ரையும் மாற்றி திட்டத்தின் உத்தர வாதத்தையும் பறிக்கும் ‘விபி ஜி ராம் ஜி’  என்ற புதிய சட்டத்தையும் நிறைவேற்றி யுள்ளது. சட்ட நகலை கொளுத்தி ஆர்ப்பாட்டம்  எனவே, விவசாயத் தொழிலாளர் களுக்கு விரோதமான ‘விபி ஜி ராம்  ஜி’ சட்டத்தை ஒன்றிய அரசு உடனடி யாக திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி திட்டத்தை வலுப் படுத்தி செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 200-க்கும்  மேற்பட்ட   ஒன்றிய  அரசு அலுவல கங்கள் முன்பு சட்ட நகலை கொளுத்தி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆவேசமிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய துணைத் தலை வர் ஏ. லாசர் தேனி மாவட்டம் பாளை யத்திலும், மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலும், மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்த லிங்கம் நாகப்பட்டினம் மாவட்டம் தலை ஞாயிறிலும், மாநிலப் பொருளாளர் அ. பழனிச்சாமி பெரம்பலூர் தெரனியிலும், மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் சேலம் மாவட்டம் மலையனூரிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.